என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமண விருந்து"
- விருந்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்ஷெட்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்தது. இதில் இந்திய திரை உலகினர் அனைவருமே பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணத்தின் 2-வது முந்தைய விருந்து இத்தாலி, பிரான்ஸ் கப்பலில் வைத்து நடந்தது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற ஜான்விகபூர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விருந்து நிகழ்ச்சியில் ஜான்விகபூர் காதலன் ஷிகர் பகாரியாவுடன் நடந்து வருவது மற்றும் கடற்கரை அழகை ரசிப்பது என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மே 29-ந் தேதி 800 விருந்தினர்கள் இத்தாலியில் இருந்து பிரான்சின் தெற்கே 4380 கிலோ மீட்டர் தூரம் சென்று விருந்து நிகழ்ச்சியை கொண்டாடினர். மே 29-ந் தேதி தொடங்கிய விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
- நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் 70 பேருக்கு உடல் நலம் பாதிப்பு.
- சிலரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றில் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 70 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமண விழாவில் சுமார் 200 பேர் உணவு சாப்பிட்ட நிலையில் அங்கு பரிமாறப்பட்ட ரசகுல்லா இனிப்பை சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதில், அர்சூ (1), யூசுப் (2), ஷிஃபா (4), அஸ்ரா (5), சாசியா (7), இர்பான் கான் (48), சுல்தான் (52), மற்றும் ரியாசுதீன் (55) ஆகியோரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் சக்தி பாசு கூறுகையில், "மாவட்ட மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளின் உடல் நிலை சீராக இருக்கிறது. சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை.
- மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.
திருவனந்தபுரம்:
திருமண வீடுகளில் மாப்பிள்ளை வீட்டாருக்கு தனி கெத்து இருக்கும். வரவேற்பு உள்பட விருந்து நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு தான் முதல் மரியாதையும் வழங்கப்படும். இதில் ஏதாவது குறை இருந்தால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூளும்.
தமிழ் சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம். கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு:-
ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் தோழர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது. அப்போது மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.
இதில் பிரச்சினை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்து அப்பகுதி போலீசார் மண்டபத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவத்தை திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்