என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடையில்லா சான்று"

    • ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • 7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கியது அம்பலம்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியது மோசடி நடந்துள்ளது.

    இதையடுதது, ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தலைமை காவலர்களான சங்கு பாலன், ஜோசப் சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராமஜ் அதரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கி அவர் பணியில் தொடர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    • கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது.
    • பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது.

    இது, எம்ஜி சாலையின் அருகே காஸ்டர்பா சாலையில் உள்ள ரத்னம்ஸ் வளாகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ளது. இந்த பப் தீ பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் என்ஓசி இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால், தீ பாதுகாப்பு மீறல்களுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி கோலியின் பப்பிற்கு தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக நோட்டீஸ் அனுப்பியது.

    சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி அதிகாரடிகள் நடவடிக்கை எடுத்தனர். முதல் முறையாக கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது. ஆனால், கோலி தரப்பில் இருந்து பதில் இல்லை.

    இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி கோலிக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    முன்னதாக, One8 Commune பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது.
    • ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில், திருப்பூர் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஓடைப் புறம்போக்கில் வசித்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. இதில் அவர்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப வீடுகள் அமைத்துக் கொண்டனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு, மின் இணைப்பு தர, மின் வாரியத்தினர் தடையில்லாச் சான்று வேண்டும் என்று கேட்பதாகவும் இது குறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை.

    இதனால் உடனடியாக தடையில்லா சான்று வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்த, அறிவொளி நகர் வார்டு உறுப்பினர் சையது ஒளி பானு மற்றும் பொதுமக்களிடம்,பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மந்தை புறம்போக்கு நிலம் என்று ஆவணங்களில் உள்ள வீடுகளுக்கு கால்நடை துறை அதிகாரிகளுடன் வரும் 2-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தாசில்தார் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், தண்ணீர்பந்தல் நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்லத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னப்பன்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×