search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிதாசன் பேச்சு"

    • தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது.
    • கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா, மணி மஹாலில் நடந்தது. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார்.

    மேயர் தினேஷ்குமார், உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் கருணாநிதி, அறக்கட்டளை செயலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். முதுநிலை பேராசிரியர் விவேகானந்தன், தம்பதியர் உயிர்க்கலப்பு தவம் நிகழ்த்தினார்.சச்சிதானந்தா ஜோதி நிகேதன்பன்னாட்டுப்பள்ளி செயலாளர் கவிதாசன் பேசியதாவது:- திருமணமான பிறகே சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலை உருவாகிறது.வாழ்க்கை சிறப்பாக மாற்றப்படுகிறது. மனைவி ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் சிறப்பாக இருக்க, மனைவி சிறப்பாக இருக்க வேண்டும்.தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது. இருந்தாலும் கூட, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனநிறைவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    சட்டம் பேசுபவர் வழக்கு நடத்தலாம். வாழ்க்கை நடத்த முடியாது. குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட மனைவியை கணவன் மனதார பாராட்டினால், பிரச்னையே இருக்காது. வாரம் ஒருமுறையாவது பாராட்டினால் வாழ்க்கை இனிமையாக அமையும்.தொழிலில் வெற்றியடைந்தவன் வாழ்வே முழுமை பெறும். அதற்கு மனைவியின் உறுதுணை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×