search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி அலுவலர் பாராட்டு"

    • போட்டியில் தீபன் சக்கரவர்த்தி தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கமும், பெற்று சாதனை படைத்தார்கள்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முத்துக்குமார், ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    தருமபுரி,

    மண்டல அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டி சென்னை ஆவடியில் நடைபெற்றது .இதில் தருமபுரியில் இருந்து 6 பேர் பங்கேற்றார்கள்.

    அதில் வசந்த் தங்கப்பதக்கமும், தியானேஷ்வர் வெள்ளி பதக்கம், ரிஷி சங்கர் வெள்ளி பதக்கம், சுதர்சனா வெண்கல பதக்கம், புகழரசு வெண்கல பதக்கமும், தக்ஷித் வெண்கல பதக்கமும், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் தீபன் சக்கரவர்த்தி தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கமும், பெற்று சாதனை படைத்தார்கள்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முத்துக்குமார், ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    தருமபுரி மாவட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர் சுதாகர், துணை பயிற்சியாளர் சிவகுமார், இணை பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ராம்குமார், குங்குமகீதன், விஸ்வநாதன், தமிழரசு டிவித், ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×