என் மலர்
நீங்கள் தேடியது "நீதிபதி நேரில் ஆய்வு"
- கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்றது.
- காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு கடந்த 17 -ந் தேதியன்று போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பள்ளி சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களான காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.
தீயில் கருகி சேதமடைந்த இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், காவல் துறை வாகனங்கள் ஆகியவையின் பதிவு எண்களை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் எந்தெந்த வாகனங்கள் உள்ளது என்பதை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி முகமது அலி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் வாகன பதிவு எண்கள், வாகனத்தின் காப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.