search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர் திருமணம்"

    • கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
    • நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மாண்டி தொகுதியில் பதவியேற்ற கங்கனா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

    அந்தவகையில் கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

    இதையடுத்து வருண் தனது இன்ஸ்டாகிராமில், "நன்றி தீதி கங்கனா ரணாவத். இப்போது சண்டிகரில் வீடு உள்ளது," என்று படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

    வருணின் மனைவி அஞ்சலி ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் புதிய வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களை பதிவிட்டு, கங்கனாவை "அன்பு, அடக்கம் மற்றும் தைரியம்" என்றும் பாராட்டியுள்ளார்.

     

    • கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திரும ணத்திற்கு இன்று காலை சென்றுள்ளனர்.
    • மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கனகசபை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை (வயது 50), மருது (45). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே சேலம் டு சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்ட பத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திரும ணத்திற்கு இன்று காலை சென்றுள்ளனர். இந்நிலையில் கொங்கு திருமணம் மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்லும் பொழுது சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் ஏ. ஆர். ஆர் வள்ளிகந்தன் என்ற பேருந்து அதிவேகமாக வந்து கனகசபை இருசக்கர வாகனம் மீது மோதி 50 அடிக்கு தரதரவென்று இழுத்துச் சென்றது இதில் கனகசபை தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்து போனார் மருதுக்கும் பலத்த அடிபட்டது.

    அருகில் இருந்தவர்கள் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தினார்கள்.விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருதுவை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கனக சபை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற தனியார் பேருந்துகள் அதிவேகமாக ஊருக்குள் வருவதால் அப்பாவி பொதுமக்கள் பலியாகி றார்கள். எனவே சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் தனியார் பேருந்துகள் மீது நடவடி க்கை எடுக்க வே ண்டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்

    ×