என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷ்யா"

    • பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரும் பனை நுங்குவை மிகவும் விரும்புகிறார்கள்.
    • பனை மர தொழிலாளர்கள் 350 பேர் வேலை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

    கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும் கோடைகால நோய்களை தவிர்ப்பதற்கும் சிறந்த மருந்தாக பனை நுங்கு விளங்குகிறது.

    சாலையோரங்களில் ஆங்காங்கே விற்கப்படும் பனை நுங்குகளை நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள்கள் என்று அழைக்கப்படும் இவற்றை வெளிநாட்டினர் ஆர்வத்துடன் சாப்பிட்டு வருகின்றனர்.

    அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரும் பனை நுங்குவை மிகவும் விரும்புகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி-புவனகிரி மாவட்டத்தை சேர்ந்த முவ்வா ரமேஷ் ஸ்வேதா என்பவர் தெலுங்கு புட்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பனை நுங்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    2 நாட்களுக்கு ஒருமுறை 1500 கிலோ வரை 20 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 முதல் 300 கிராம் வரை பாக்கெட்டுகளில் அடைத்து அனுப்பி வைக்கின்றனர்.

    முனுகோடு மற்றும் தண்டுமல்காபுரம் கிராமங்களை சேர்ந்த பனை ஏறும் தொழிலாளர்களிடம் இருந்து நுங்கு சேகரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    இதன் மூலம் பனை மர தொழிலாளர்கள் 350 பேர் வேலை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

    • கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.
    • உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.

    உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷிய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இதில் ரஷியா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

    சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார். இதனை பார்த்த ரஷிய பிரதிநிதி உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார். பின் ரஷிய பிரதிநிதியை துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டார்.

    மேலும் ரஷிய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் எம்பி அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார். இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷ்ய அதிபரின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்

    2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருபவர் விளாதிமிர் புதின். இவரது ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 கார்கள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புதினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் கோடி ஆகும். கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது. இதன் மதிப்பு 11 ஆயிரத்து 500 கோடி ஆகும். இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மட்டும் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6 கோடி) செலவிடப்படுகிறது.

    மேலும், 19 பங்களா வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 5 கோடி) மதிப்பில் கைக்கடிகாரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.
    • வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின் நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.

    இந்நிலையில் தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஷ்வர்யா கல்பாத்தி இருவரும் வெங்கட் பிரபுவை கேள்வி கேட்குமாறு கை சைகையில் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு தலையில் பேஸ்பால் பேட் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வைத்துள்ளார். வெங்கட் பிரபு இருவரையும் கையெடுத்து கும்பிடுகிறார். இவ்வாறு அந்த காட்சி அமைந்துள்ளது.

    இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. நேற்று வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

    இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் விஜய் ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டியபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய்  ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது  படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.. 

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய்  சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

    இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

    இதன்மூலம் நாளை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

    இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் 'THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில் 'The GOAT' படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று அந்த பாடலின் Promo வீடியோவை வெளியிட்டு பட நிறுவனம் அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்
    • ’விசில் போடு’ என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

    இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் 'THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று நேற்று பதிவிட்டார்.

    படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். 'விசில் போடு' என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

    வெங்கட் பிரபு அவரின் எக்ஸ் பக்கத்தில் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்ம தளபதிக்கு விசில் போடு" என பாட்டின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் விஜய் ஒரு விசிலை ஊதியபடி காணப்படுகிறார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில், மதன் கார்கி வரிகளில் 'The GOAT' படத்தின் விசில் போடு பாடம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடலின் தலைப்பான விசில் போடு தலைப்பை இன்று காலையில் வெளியிட்டனர் படக்குழுவினர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    இந்நிலையில் பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது. தமிழ் புத்தாண்டின் கொண்டாட்டம் இப்பாடலின் மூலம் ரசிகர்களிடையே இரட்டிப்பாகியிருக்கிறது.

    இப்பாடலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல்.
    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் தற்பொழுது " தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியாகி 19 மணி நேரம் கடந்த நிலையில் இது வரை 19 மில்லியன் பார்வையையும் 1.15 மில்லியன் லைக்சுகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

    பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல். தற்பொழுது விசில் போடு பாடல் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரபிக் குத்து பாடலின் வியூசை இது தாண்டி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
    • நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. தெனிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" இருந்தது. தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது.

    இதன் மூலம் அவர் பட பாடலின் சாதனையை அவரே அடுத்தப்பட பாடலின் மூலம் முறியடித்து இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×