என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்வே சுரங்க பாதை"
- 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது.
- 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் ரெயில்வே சுரங்க நடைபாதை உள்ளது. இந்த பாதை நகரின் வடக்கு, தெற்கு பகுதி மக்களை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தோல்வியடைந்ததால் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் வெகு தொலைவு சென்று தேவையான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழநியாண்டவர் நகர், ஜீவா நகர், தாண்டாகவுண்டன்தோட்டம், காந்திபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாதை முடக்கப்பட்டுள்ளதால், நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.