search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கி கிடக்கும்"

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-20,அவினாசி-38.40, பல்லடம் -45, ஊத்துக்குளி-4, காங்கயம்-1.40, தாராபுரம்-20, மூலனூர்-40, குண்டடம்-27, அமராவதி அணை-2, உடுமலை-2, மடத்துக்குளம்-4, திருப்பூர் கலெக்டரேட்- 16, வெள்ள கோவில்-6, திருப்பூர் தெற்கு-5, கலெக்டர் முகாம் அலுவலகம்-45.50. மொத்தம் 276.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. 

    • 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது.
    • 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் ரெயில்வே சுரங்க நடைபாதை உள்ளது. இந்த பாதை நகரின் வடக்கு, தெற்கு பகுதி மக்களை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தோல்வியடைந்ததால் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் வெகு தொலைவு சென்று தேவையான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழநியாண்டவர் நகர், ஜீவா நகர், தாண்டாகவுண்டன்தோட்டம், காந்திபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாதை முடக்கப்பட்டுள்ளதால், நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×