என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நம்ம ஊரு சூப்பரு"
- ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் டாக்டர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனம் மற்றும் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் சஞ்சுதா மற்றும் பாலாமணி ஆகியோர் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- கிராமப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்பட்டு வருகிறது.
- மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.
பரமத்தி வேலூர்:
தமிழக அரசு சார்பாக கிராமப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கிடந்துள்ள குப்பைகளை அகற்றியும், தெருக்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
- பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் குடிநீர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் திட திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை ஏற்படுத்துவதற்காக" நம்ம ஊரு சூப்பரு" என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது .
வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் இதன் மூலம் நடைபெற உள்ளது. கிராமங்களில் கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிகள் சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்கு விக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் சுகாதாரம் கழிவு மேலாண்மை முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான சுத்தம் செய்தல் பள்ளி கல்லூரிகளில் சுகாதார மற்றும் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் தூய்மை பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது.
கரூர்
புன்னம்சத்திரம் பகுதியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம் கலந்துகொண்டு பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. தொடர்ந்து நெகிழியை பயன்படுத்தும்போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நகர மற்றும் கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்புமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் சாருமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்