search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    வேலூர் மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பிரசாரம்

    • பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
    • பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் குடிநீர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் திட திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை ஏற்படுத்துவதற்காக" நம்ம ஊரு சூப்பரு" என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது .

    வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் இதன் மூலம் நடைபெற உள்ளது. கிராமங்களில் கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பணிகள் சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்கு விக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் சுகாதாரம் கழிவு மேலாண்மை முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது.

    பள்ளி மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் பெரிய அளவிலான சுத்தம் செய்தல் பள்ளி கல்லூரிகளில் சுகாதார மற்றும் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் தூய்மை பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×