என் மலர்
முகப்பு » வெள்ளைக்கொடி ஏந்தி அமைதிக்கூட்டம்
நீங்கள் தேடியது "வெள்ளைக்கொடி ஏந்தி அமைதிக்கூட்டம்"
- உலக அமைதி நாளை முன்னிட்டு சி.ஐ.டி.யு. சார்பில் அமைதி கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு உலக அமைதி நாளை முன்னிட்டு சி.ஐ.டி.யு. சார்பில் அமைதி கூட்டம் நடைபெற்றது.
வெள்ளைகொடியேந்தி மெழுகுவர்த்தியுடன் உலகில் எந்த இடத்திலும் போர் வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம் ,கிட்டு என்கிற சன்முகம், பெருமாள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட தலைவர் ராஜம்மாள், மாவட்ட செயலாளர் கவிதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
×
X