search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ். Accident"

    • பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தாணியம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.
    • மற்றொரு பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையின் ஓரமாக குறைந்த வேகத்தில் இயக்கினார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தாணியம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பேருந்து நெரிஞ்சிக்குடி விலக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையின் ஓரமாக குறைந்த வேகத்தில் இயக்கினார். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையோரம் இருந்த மண் அரிக்கப்பட்டு பலமிழந்து காணப்பட்டது.

    இதில் சிக்கிய அரசு பேருந்து பள்ளத்தில் சரிந்து நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று எண்ணி கூச்சல் போட்டனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட அனைத்து பயணிகளும் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.

    விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அந்த பஸ் மீட்கப்பட்டு, அதே பஸ்சிலேயே பயணிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×