என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலி பறிப்பு"

    • தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார்.
    • மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்அருகே விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி மஞ்சுளா. (வயது 36). இவர் இன்று காலை தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உஷாரான மர்ம நபர்கள் நகையுடன்மாயமானார்கள். இதுகுறித்து மஞ்சுளா விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • சின்னசேலம் அருகே கணவன் கண்முன் பெண்ணிடம் தாலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    • அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது கணவர் செல்வகுமாரிடம் வீட்டு வாசல் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மர்ம நபர்கள் 4 பேர் மகாலட்சுமியின் பின்புறமாக அவருக்கு தெரியாமல் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்கள். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் சென்ற4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×