என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் பவன் கல்யாண்"
- ஆந்திர மக்கள் பவன் கல்யாணை நம்ப தயாராக இல்லை.
- எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.
திருப்பதி:
அமராவதியை ஆந்திராவில் தலைநகரமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அமைச்சர் ரோஜா கார் மீது ஜனசேனா கட்சியினர் கல் வீசியது சம்பந்தமாக நடிகர் பவன் கல்யாணுக்கும், அமைச்சர் ரோஜாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் பவர் கல்யாண் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிறுத்த கூட ஆட்கள் இல்லை. இதனால் அவர் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு திருப்பி அனுப்பினார்.
அப்போது வாய் திறந்து பேச முடியாத பவன் கல்யாண் தன்னை பொதுக்கூட்டத்தில் பேச முடியாதவாறு திருப்பி அனுப்பியதாக கூறுகிறார்.
அப்போது கஷ்டப்படாத நீங்கள் இப்போது ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.
பவன் கல்யாண் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆந்திராவில் உள்ள ஆண்கள் 3 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வருவார்.
ஆந்திர மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் சேதப்படுத்தினர்.
- சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த தியேட்டரில் 700 பேர் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்க முடியும். ஆனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தனர். அவர்கள் உட்கார்ந்து படம் பார்க்க முடியாததால் போதையில் இருந்த ரசிகர்கள் சினிமா திரையை பிளேடால் கிழித்தனர். இதுகுறித்து சினிமா தியேட்டர் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 4 போலீசார் மட்டுமே வந்ததால் அவர்களால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து 2-வது காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையை முழுவதுமாக கிழித்து அதில் ஹாப்பி பர்த்டே பவன் கல்யாண் என எழுதினர்.
மேலும் திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால் இதனை சீரமைக்க 5 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டர் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.
- ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.
திருப்பதி:
ஆந்திராவில் பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க தற்போதே களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் தீக்சை விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம் விரதம் இருக்கும் அவர் சூரியன் அஸ்தமான நேரத்திற்கு பிறகு மட்டும் ஒரு வேளை உணவை சாப்பிடுகிறார்.
பவன் கல்யாண் நேற்று விஜயவாடா வந்தார். அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினார்.
இதை தொடர்ந்து பசுவை பொன்னையா ஆடிட்டோரியத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெகன்மோகன் ரெட்டி திணறி வருகிறார். ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் சிம்மாசனத்தை காலி செய்து விட்டு போங்கள்.
நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாததால் மக்கள் கூட்டம் ஜனசேனா கட்சியை நாடி வருகின்றனர். ஜனசேனா கட்சியினரை மிரட்டும் வேலையில் ஒய். எஸ்.ஆர். காங்கிரசார் ஈடுபடக்கூடாது.
ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான விலையை உயர்த்தி விட்டனர். போலி மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் மலிவான மதுபானங்களை குடித்து ஏராளமானோர் இறந்துள்ளனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஆந்திர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை ஜனசேனா கட்சி கைப்பற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.
- நடிகர் பவன் கல்யாண் விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 150 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 25 இடங்களும் நடிகர் பவன் கல்யாணி ஜனசேனா கட்சிக்கு 1 இடமும் கிடைத்தது. பவன் கல்யாண் 2 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியில் இருந்த தலா ஒரு எம்.எல்.ஏ., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். தற்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும் ஜனசேனா கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.
விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். திருப்பதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் பவன் கல்யாண் காளஹஸ்தி, சித்தூர், கர்னூல், கடப்பா, விஜயவாடா மாவட்டங்களில் நகரங்கள் தொட்டு கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அப்போது தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
பொதுமக்களிடம் தனது கட்சி கொள்கைகள் மற்றும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.
சுற்றுப்பயணத்திற்கு செல்லும்போது முதலமைச்சர் செல்லும்போது எப்படி போலீஸ் கான்வாயில் செல்கிறாரோ அதேபோல் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக புதியதாக 8 கருப்பு நிற கார்களை வாங்கியுள்ளார்.
அந்த கார்கள் பிரசாரத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.
முதலமைச்சராவதற்கு முன்பாக சென்டிமென்டாக கான்வாயில் செல்வதற்காக கார்களை வாங்கி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எப்படியாவது தனது கட்சியை பலப்படுத்தி முதலமைச்சராக வேண்டும் என பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாராகியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைபயணம் செய்து தனது கட்சியை பலப்படுத்தி ஆட்சியை பிடித்தார்.
அதேபாணியில் தற்போது நடிகர் பவன் கல்யாணும் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது இது அறிவிக்கப்பட்டது.

பவன் கல்யாண் கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர் இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan


Vantha Rajavathaan Varuven certified U 🥁🥁🥁 From FEB 1st WorldWide! #STRTheKing#SundarCBonanza#VRVHappyFamily#VRVFromFeb1st 🎉💥🔥 @hiphoptamizha@saregamaglobalpic.twitter.com/wAFqdTIMiW
— Lyca Productions (@LycaProductions) January 24, 2019



