search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை வார்த்தை சவால்"

    • உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஒரு வார்த்தை சவாலை சந்திக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “டெமாக்கரசி” என்று ஒரே வார்த்தையில் ஜன நாயகத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    சமூக வலைதளமான டுவிட்டரில் 'ஒரு வார்த்தை சவால்' டிரெண்டாகி வருகிறது. ஒரே வார்த்தையில் தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் 'ஒரு வார்த்தை'யை டுவிட்டரில் பதிவிட்டு தங்கள் கொள்கை, விருப்பம், கோட்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவை சேர்ந்த ரெயில் நிறுவனம் முதலில் 'ட்ரெயின்' என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஒரு வார்த்தை சவாலை சந்திக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "டெமாக்கரசி" என்று ஒரே வார்த்தையில் ஜன நாயகத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் "கிரிக்கெட்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    அந்த வரிசையில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் 'திராவிடம்' என்ற ஒரு வார்த்தையை பதிவிட்டுள்ளார். திராவிட மாடல் அரசை முன் வைத்து அதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி "தமிழ்நாடு" என்று பதிவிட்டார்.

    வி.கே.சசிகலா அனைவரும் ஒற்றுமையாக இணைய வேண்டும் என்ற அடிப்படையில் "ஒற்றுமை" என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழன்" என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "தமிழ் தேசியம்" என்றும் டுவிட்டரில் ஒரே வார்த்தையில் குறிப்பிட்டுள்ளனர்.

    ×