என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரைசிங் உரிமையாளர் சங்கம்"
- பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
- ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை தொழில் மேம்பாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய மத்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற தொழில்மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்தியமந்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி, செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் தீப்தி சுப்பிரமணியம் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூர் பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதியும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில் சிறந்த ஏற்றுமதி நகரம் என்ற விருதினையும் பெற்றுள்ளது. திருப்பூருக்கு மேலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால் வாழ்வாதார நன்மைகள் கிடைக்கும்.
அதன்படி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறு சுழற்சி மூலம் மீண்டும் சுத்திகரிப்பு செய்து திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில் எடுத்து கொண்டு, குறைந்த கட்டணத்தை வசூல் செய்து மறுசுழற்சி முறையை செயல்படுத்தினால் இங்குள்ள தொழில் துறையினருக்கு உற்பத்தி செலவினங்கள் குறையும். மேலும் கடைசி நிலை கழிவுநீரை கடலில் சேர்க்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினால் திருப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். குழாய் மூலம் எரிவாயு திட்டத்தை திருப்பூரில் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். திருப்பூரில் பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தனி பாதுகாப்பு குடியிருப்பு வசதியை மத்திய அரசு மேம்படுத்தி தர வேண்டும். திருப்பூர் ரெயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பயணிகளுக்கு அதிநவீன வசதிகளை உருவாக்கித்தந்தால், வெளிமாநில வர்த்தகர்களின் வருகை அதிகரிக்கும். அதேபோல் சரக்கு பெட்டக வசதியையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்கு போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும். முறைகேடாக பஞ்சு நூலை பதுக்கி வைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு மின்சார கட்டண மானிய சலுகை வழங்க வேண்டும். திருப்பூருக்கு வரும் வௌிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சரக்குகளை நகர பகுதியில் இருந்து துறைமுகங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல புதிய ரிங் ரோடுகள் திருப்பூரில் அமைக்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்