search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் உற்பத்தியாளர்"

    • தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.
    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:- நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ்,ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.

    ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்ய ப்பட்டுள்ளது. பணமோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியு ள்ளனர்.   

    • பருத்தி சீசன் தொடங்கியவுடன் ஒரு கேண்டியின் விலை ரூ.72 ஆயிரம் என குறைந்துள்ளது.
    • மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசு பருத்திக்கு ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு சைமா தலைவா் ஈஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    நாட்டில் கடந்த 6 மாதங்களாக பஞ்சு பதுக்கல் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையால் ஒரு கோண்டி (360 கிலோ) பஞ்சு ரூ.1.05 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பருத்தி சீசன் தொடங்கியவுடன் ஒரு கேண்டியின் விலை ரூ.72 ஆயிரம் என குறைந்துள்ளது.

    இந்நிலையில் வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு கேண்டி ரூ.65 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது.எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

    இதில் முதல் தர பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரம், இரண்டாம் தர பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் என்று நிா்ணயிக்க வேண்டும். இந்த விலையை ஜின்னா்ஸ் மற்றும் வியாபாரிகள் கொடுக்க மறுத்தால் இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) தலையிட்டு கொள்முதல் செய்து அரைத்து நியாயமான விலையில் பஞ்சை விற்பனை செய்ய வேண்டும்.மேலும் உள்நாட்டுத் தேவைக்குப்போக மீதமுள்ள பஞ்சை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.அதிலும் மாதம் 5 லட்சம் பேல் என்ற வகையில் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இதன் மூலமாக பெரு வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்து பதுக்கிவைத்து விலை ஏற்றம் செய்வதைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வு.
    • பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நாட்டுக்கு அதிக அளவு அன்னிய செலாவணி கிடைக்கும்.ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    ×