search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனி ரகம்"

    • இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் வந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் விசைத்தறிதொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலை நம்பி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது அதிநவீன ஏர்ஜெட்,சூல்ஜர்,போன்ற தானியங்கி விசைத்தறிகள் அதிகரிப்பால் விசைத்தறி தொழிலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

    எனவே விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற, கைத்தறி தொழிலுக்கு ரகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல் விசைத்தறிக்கு என்று தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான சட்டம் இயற்றி விசைத்தறி தொழிலையும், விசைத்தறியாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசு முழு மானியம் வழங்க வேண்டும். அதேபோல பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரவுள்ள பருத்தி சாகுபடி சீசனில் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வருடம் முழுவதும் ஒரே சீரான விலையில் நூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×