என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில்"

    • இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
    • மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியளவில் சாஸ்திர பூர்வமாக புண்யாவதனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புஷ்ப யாகமும் நடக்கிறது. இதனால் இன்று கோவிலில் நடக்க இருந்த நித்ய கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று முன்தினம் மாலை புஷ்ப யாகம் நடந்தது.

    அதையொட்டி அன்று காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    மதியம் 2 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி என 12 வகையான மலர்களும், 6 வகையான இலைகளும் சேர்த்து மொத்தம் 3½ டன் எடையிலான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புஷ்ப யாகத்துக்கு பயன் படுத்தப்பட்ட மலர்களை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், காணிக்கையாளர்களும் வழங்கினர்.

    • வசந்தோற்சவம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    முதல் 2 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் 3-வதுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் மற்றும் ருக்மனி, சத்தியபாமா சமேத கிருஷ்ணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், தோமாலை சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஆஸ்தானம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வந்தது.

    3-வது நாளான நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திர மூர்த்தி, ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

    • 7-ந்தேதி மரத்தேரோட்டம் நடக்கிறது.
    • 8-ந்தேதி சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான புண்ய ஹவச்சனம், மிருத்ய கிரஹணம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 1-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை பல்லக்கு வாகனத்தில் மோகினி அவதாரத்தில் வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா.

    5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மரத்தேரோட்டம், மாலை கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம் மற்றும் இரவு கொடியிறக்கம் நடக்கிறது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் இந்து தர்மா பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் மற்றும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் 9 நாட்களும் பஜனைகள், கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

    • 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாக்ஷாத்கார வைபவ உற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதை முன்னிட்டு 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 2-வது நாள் அனுமந்த வாகன வீதிஉலா, 3-வது நாள் கருட வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன வீதிஉலா தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.

    3 நாள் சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்ததும், 27-ந்தேதி ஸ்ரீவாரிமெட்டு அருகே அமைந்துள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது. சாக்ஷாத்கார வைபவ உற்சவத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி திருப்பாவாடை சேவை, 24-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை நடக்கும் ஆர்ஜித கல்யாணோற்சவம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
    • அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதையொட்டி 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அன்று அதிகாலை கோவிலில் மூலவர்களுக்கு பூஜைகள் முடிந்ததும் மூலவர் சன்னதியில் இருந்து நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த உற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட புத்தகம் திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் வெளியிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று வருடாந்திர வைபவ உற்சவ விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, அர்ச்சகர் நாராயண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாளை முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
    • 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தூய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற நறுமண பொருட்கள் அடங்கிய திரவியத்தை கோவில் முழுவதும் தெளித்தனர். மதியம் 12.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    உற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகன வீதிஉலா, 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியைச் சேர்ந்த பக்தர் நரசிம்மன் என்பவர் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான திரைசீலையை காணிக்கையாக வழங்கினார்.

    • உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இன்று பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாத்காத்கார வைபவ உற்சவம் நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது.

    காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை சீனிவாசமங்காபுரத்தை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவமும், ஆஸ்தானமும் நடக்கிறது.

    • கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வர சுவாமி பார்வேடு உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி ஊர்வலம் ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பார்வேடு மண்டபத்தை வந்தடைந்தது. அங்கு பார்வேடு உற்சவம் நடைபெற்றது. ஆஸ்தானம் முடிந்து மாலையில் உற்சவர்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் அன்னமாச்சார்யா திட்டத்தின் கீழ் கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர். பஜனை குழுவினர் பஜனை, கோலாட்டம் நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×