என் மலர்
நீங்கள் தேடியது "நள்ளிரவில் கொட்டிய மழை"
- மழை பெய்து வந்த நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனை அடுத்து மாலையில் தருமபுரி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி, கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.