என் மலர்
முகப்பு » கம்பம்-சிலம்ப போட்டி
நீங்கள் தேடியது "கம்பம்-சிலம்ப போட்டி"
- மல்லர் கம்பம், சிலம்பப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
- பதக்கங்களை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் வழங்கினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டியில் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மல்லர் கம்பம், சிலம்பப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் வழங்கினார்.
தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் சண்முகம், தலைமை ஆசிரியர் பழனி, தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
×
X