search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு"

    • சின்னாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து உள்ளது.
    • உபரி நீர் திறந்துவிட பொதுப்பணி துறையினர் முடிவு செய்தனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னார் அணை உள்ளது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பெட்ட முகிலாலம், ஐயூர், தேன்கனிக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் கொள்ளளவு 50 அடிக்கு 48 அடி நீர் நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்துவிட பொதுப்பணி துறையினர் முடிவு செய்தனர்.

    மேலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளதாலும் சின்னாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும் 400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவு எட்டியது. அதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரவு பொதுப்பணி துறையினர் 23 ஆயிரம் கன அடி உபநீரை அணையில் இருந்து திறந்து விட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து உள்ளது.

    கரையோர மக்களுக்கு பொதுப்பணி துறையினர் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த உபரி நீர் திறப்பால் பஞ்சப்பள்ளி மாரண்டஅள்ளி பாலக்கோடு பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×