என் மலர்
நீங்கள் தேடியது "தேவி ஸ்ரீபிரசாத்"
- புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனமாடினார்.
- புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றிருப்பதுடன் வசூலையும் வாரி குவித்துள்ளது. படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பெரிய காரணம்.
புஷ்பா முதல் பாகத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் நடிகை சமந்தா நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரதிபலித்தது. புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
இந்நிலையில் புஷ்பா 3 என்ற பெயரில் படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடல்களின் வரவேற்பு பற்றி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கூறுகையில், "ஐட்டம் பாடலில் எந்த நடிகை நடனம் சர்வதேச அளவில் பாடல் பிரபலமாகும் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும். ஸ்ரீலீலா அற்புதமான நடன கலைஞர். என் இசையில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடனம் ஆடி இருக்கின்றனர். அந்த வகையில் புஷ்பா 3 உருவாகி வரும் நிலையில் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு ஜான்வி கபூர் பொருத்தமாக இருப்பார் என நான் விரும்புகிறேன். ஜான்வி கபூர் ஓர் அற்புதமான நடன கலைஞர்" என்றார்.
- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை உருவாக்கியுள்ளார்.
- இதன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது, இதில் கமல் கலந்துக் கொண்டார்.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் இருக்கிறார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கையில் சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.
பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கி கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் தசாவதாரம் படத்துக்கு கொடுத்த பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது. ஆரம்ப காலத்தில் தனி பாடல்கள் சினிமாவை விட பிரபலமாகி உள்ளன. பிறகு சினிமா அத்தனையையும் விழுங்கி விட்டது. படத்துக்கு என்ன இசை உண்டோ அதைத்தான் கிட்டத்தட்ட நூறு வருடமாக போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்பதால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன். இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும். இது இசைக்கும் நல்லது இசை ரசிகர்களுக்கும் நல்லது என்றார்
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜிதா பொன்னடா.
- இவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் பரவியது.
தமிழில் 'செவன்' படத்தில் நடித்தவர் பூஜிதா பொன்னடா. இவர் தற்போது 'பகவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை பூஜிதா பொன்னடாவை மணந்துள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பூஜிதா பொன்னடா அளித்துள்ள விளக்கத்தில், "நான் தேவி ஸ்ரீபிரசாத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்று புரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை, சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என்றார்.