search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள் - நடிகர் கமல்ஹாசன்
    X

    கமல் - தேவி ஸ்ரீபிரசாத்

    சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள் - நடிகர் கமல்ஹாசன்

    • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை உருவாக்கியுள்ளார்.
    • இதன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது, இதில் கமல் கலந்துக் கொண்டார்.

    பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ பெண்ணே என்ற தனி இசைப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் இருக்கிறார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கையில் சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும்.

    தேவி ஸ்ரீபிரசாத்

    பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கி கொண்டு வரலாம். நான் இளையராஜாவுக்கு பெரிய ரசிகன். தேவி ஸ்ரீபிரசாத் தசாவதாரம் படத்துக்கு கொடுத்த பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது. ஆரம்ப காலத்தில் தனி பாடல்கள் சினிமாவை விட பிரபலமாகி உள்ளன. பிறகு சினிமா அத்தனையையும் விழுங்கி விட்டது. படத்துக்கு என்ன இசை உண்டோ அதைத்தான் கிட்டத்தட்ட நூறு வருடமாக போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

    கமல் - தேவி ஸ்ரீபிரசாத்

    இசைக்கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் பெரிய பணக்காரர்கள். தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டு இருக்கிறார்கள். சுருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்பதால் இங்கு சினிமா கற்றுக்கொள்ளலாம். இசையையும் கற்றுக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னேன். சினிமாவை விட பெரிதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன். இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும். இது இசைக்கும் நல்லது இசை ரசிகர்களுக்கும் நல்லது என்றார்

    Next Story
    ×