என் மலர்
நீங்கள் தேடியது "பில்லி சூனியம்"
- மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
- அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
- ஹைட்டியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும்.
- அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டது
மகனுக்கு 'பில்லி சூனியம்' வைத்ததாக . 200 பேரை படுகொலை செய்து தெருவில் போட்டு எரித்த கேங் லீடர்
கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக - போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும். ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான். பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான்.

பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் [voodoo practitioners] பில்லி சூனியம் [voodoo] வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான். அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6-8 க்கு இடையி ல் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் நேற்று இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.
கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் தொடர்பாக 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் கொல்லப்பட்டுள்ளர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில், பில்லி சூனியம் வைத்ததாக 3 பெண்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சோனஹபுத் காவல் சரகத்திற்கு உட்பட்ட ரானாடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.இறந்துபோன ஒரு பெண்ணிண் கணவர், மகன் உள்பட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக எஸ்எஸ்பி கௌஷல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும், அவர்கள் வைத்த சூனியத்தால் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பாம்பு கடித்ததாகவும் கூறி, கிராம மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள மலைப் பகுதியில் உடல்களை தூக்கி வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசிய குற்றப் பதிவுகள் ஆணைய தரவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் விவகாரத்தால் 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் கொல்லப்பட்டுள்ளர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.