search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர் கைது"

    • சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.
    • சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பூபேந்திர சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தை ஒட்டிய வீட்டில் வசிக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.

    அப்போது அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

    ஆனால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது சிலர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா எம்.பி. கிரோடி லால் மீனா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் கூறுகையில், தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளேன்.

    அசோக் கெலாட் அரசின் திறமையின்மையால் எதேச்சதிகாரமாக மாறி உள்ள காவல்துறை, தேர்தல் போன்ற முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட அட்டூழியங்களை செய்ய தயங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும் என்றார்.

    • கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை போலீசார் கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்தனர்.
    • போலீசார் ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

    சென்னை:

    சென்னை கோவிலம்பாக்கம் பகுதி சுசிலா நகரை சேர்ந்த 37 வயதுடைய பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் 2021-ம் ஆண்டு ஓர் மரம் நடும் விழாவில் புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (வயது 54) என்பவரை சந்தித்ததாகவும், அந்த நேரம் தன் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்தபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதாகவும், அதே நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பேசி இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததாகவும் கூறி உள்ளார்.

    மேலும் அவர் வயதை குறைத்து ஏமாற்றி குடும்பம் நடத்தியது தெரிய வந்ததால் அவரை விட்டு விலக முடிவெடுத்தபோது மார்பிங் செய்த தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது ஆண்ட்ரூஸ் கார்டுவெல் தலைமறைவானார்.

    தலைமறைவான அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்த மனுவின் பேரில் பள்ளிக்கரணை துணை போலீஸ் கமிஷனர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான ஆண்ட்ரூஸ் கார்டுவெல்லை தேடிவந்தனர்.

    கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விமானம் மூலம் தாம்பரம் கொண்டு வந்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
    • கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டிய ராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையில் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் அடிக்கடி இளம்பெண்ணை சந்தித்து வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காதலியின் மகள் மீதும் அவருக்கு ஆசை ஏற்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இதனை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண்ணும், அவரது மகளும் தவித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜின் ஆசை மேலும் அதிகரித்தது. அவர், கல்லூரி மாணவிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

    இதனைப் பொறுக்க முடியாத மாணவின் தாய், சப்-இன்ஸ்பெக்டர் மீது வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ், கணவரை பிரிந்த இளம்பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் இளம்பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கு, சிறுமியாக இருந்த காலகட்டத்தில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×