என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முக்கிய குற்றவாளிகள்"
- நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
- காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
புதுச்சேரி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த பைனான்சியர் மனோகரன் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கொலை தொடர்பாக சிலர் கோர்ட்டில் சரணடைந்து வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் 2பேர் காரைக்கால் வழியாக தப்பி செல்வதாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசித் தகவல் சென்றது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க காரில் சென்றனர். காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
அவ்வாறு செல்லும் பொழுது சாலையில் சென்ற சிலரை கார் இடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போக்குவரத்து போலீசார், போலீஸ் ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் திருநள்ளார் சாலையில் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. தொடர்ந்து, ஒரு சிறிய சந்தில் குற்றவாளிகள் கார் சென்ற பொழுது, காரை மடக்கி பிடித்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பின்னால் வந்த தமிழக போலீசார், அந்த காரில் வந்தவர்கள் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையின் முக்கிய குற்றவாளிகள் என்றும் அவர்களை பிடிக்க விரட்டி வந்ததாக கூறினர். இதனை அடுத்து பல வாகனங்கள் மீது விபத்தை ஏற்படுத்தியதால் 2 குற்றவாளிகள் ஓட்டிவந்த காரை பறிமுதல் செய்து, 2 குற்றவாளிகளை(கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் பெயர்களை , காரைக்கால் போலீசார் தெரியப்படுத்தவில்லை) தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சினிமா பாணியில் தமிழக மற்றும் காரைக்கால் போலீஸார்கள் காரை விரட்டி சென்று குற்றவாளிகளை பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்