search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடற்புழு நீக்கும்"

    • ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்படுகிறது.
    • ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார்.

    இதில் திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய குடற்புழு நீக்க நாள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 - 30 வயது உள்ள 2.4 லட்சம் பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு 16-9-2022 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரத்த சோகை தடுப்பு மற்றும் குடற்புழுவினால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன தடுக்கப்பட்டு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்ததார்.நிகழ்ச்சியில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×