search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகப்பேறு விடுப்பு"

    • பெண் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு மகப்பேறு விடுப்பு 9 மாதத் தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
    • தகுதியான பணியாளர்களுக்கு, இவ்விடுப்பினை அனுமதிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெண் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு மகப்பேறு விடுப்பு 9 மாதத் தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

    தகுதியான பணியாளர்களுக்கு, இவ்விடுப்பினை அனுமதிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பெண் பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை என்றும், ஆறு மாதத்திற்கு பிறகு மகப்பேறு விடுப்பு எடுக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதாகவும் புகார் வந்த நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    ×