search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்லோஸ் அல்காரஸ்"

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-4, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    லண்டன்:

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இன்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் அசத்தல் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.

    • 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
    • முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.

     பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.

    முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.

    அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 4-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார். இன்று இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெத்வதேவ் செக் வீரர் ஜிரி லெஹ்காவை சந்திக்கிறார்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜேன் லெனார்டுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டையும், ஜேன் லெனார்ட் அடுத்த செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் வென்றார். இறுதியில், அல்காரஸ் 6-3, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல் ரூப்லெவ், சின்னர் உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
    • இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரேசில் வீரர் தியாகோவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார். இதில் நடால் முதல் செட்டையும், பெட்ரோ 2வது செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை நடால் வென்றார்.

    இறுதியில், நடால் 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் 1-6 என முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது .

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் காலிறுதியில் வென்றனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே

    மோதினார். இதில் மெத்வதேவ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் கார்லோஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சின்னரும், கார்லோசும் மோத உள்ளனர்.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    ×