என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதார் பூனாவலா"
- புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் கொரோனாவுக்காக கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தது.
- ஆதார் பூனாவாலா எனக்கூறி சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளது.
மும்பை:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே.
சில தினங்களுக்கு முன் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். அவர் அவசரமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 554 தேவைப்படுவதாக கூறினார்.
வாட்ஸ் அப்பின் முகப்படமாக அதார் பூனாவாலா படம் வைக்கப்பட்டு இருந்ததால், அவர் தான் தன்னிடம் பணம் கேட்பதாக சதீஷ் தேஷ்பாண்டே நினைத்தார். இதனால் அவர் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு நிறுவன அதிகாரிகள் மூலமாக பணத்தை அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பிய பிறகு தான், அதார் பூனாவாலா பணம் கேட்டு வாட்ஸ் அப்பில் எந்த குறுந்தகவலும் அனுப்பவில்லை என தெரியவந்தது. மோசடி கும்பல் ஆதார் பூனாவாலா எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிந்த புனே பந்த்கார்டன் போலீசார், சீரம் நிறுவன உரிமையாளர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.