search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் பேட்டை கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா"

    • காவிரி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் தீர்த்த குடம் எடுத்து நடந்து வந்தனர்.
    • நாளை ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு ஜல கமல கணபதி திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    ஏரியூர்,

    ஏரியூர் அருகே உள்ள காமராஜர் பேட்டையில் உள்ள பழமையான ஜல கமல கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மேளதாளம் வழங்க வாண வேடிக்கையுடன் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காவிரி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் தீர்த்த குடம் எடுத்து நடந்து வந்தனர்.

    நாளை ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு ஜல கமல கணபதி திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×