search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிவேட்பாளர் பட்டியல்"

    • 2ந் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
    • 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 2022 - 2025க்கான புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்கான தேர்தல் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.கடந்த 2ந்தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்ட அணியினர் 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் என சங்கத்தின் 27 பதவிக்கும் மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு எதிராக 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுப்பிரமணியம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு இளங்கோவன், ராஜ்குமார், இணை செயலாளர் பதவிக்கு சின்னசாமி, குமார் துரைசாமி,பொருளாளர் பதவிக்கு கோபாலகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிராக துணை தலைவர் பதவிக்கு, செந்தில்குமார், பொருளாளர் பதவிக்கு கொண்டசாமி, இணை செயலாளர் பதவிக்கு செந்தில் போட்டியிடுகின்றனர்.

    தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி சங்க தலைவராகிறார். சக்திவேல், ராஜாசண்முகம் ஆகியோரை தொடர்ந்து சங்கத்தின் 3-வது தலைவராக சுப்பிரமணியம் பொறுப்பேற்கிறார்.இவரது அணியில் உள்ள திருக்குமரனும் போட்டியின்றி பொதுச்செயலாளராகிறார். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்தல் பொறுப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.வருகிற 14-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். 15-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.கூடுதல் நபர்கள் போட்டியிடும் பதவிகளுக்கு மட்டும் வருகிற 30-ந் தேதி காலை, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் தேர்தல் நடைபெறும். சங்க உறுப்பினர்கள் பங்கேற்று ஓட்டளிப்பர். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    ×