என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிக்கந்தர் ராசா"
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
- கடைசி போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடும் போது, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. சிக்கந்தர் ராசா குதித்து டாஸ் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் ஆகிறார்.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில் டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
- ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது. இந்த இளம் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வீரர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்த அணி தகுதி பெறத் தவறியதால், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸின் கீழ் மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில், ஜிம்பாப்வே ராசாவின் கீழ் ஒரு இளம் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணி:
சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், கேம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளஸ்ஸிங், மியர்ஸ் டியான், நக்வி ஆன்டம், ங்கரவா ரிச்சர்ட், ஷும்பா மில்டன்.
- முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்தது.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் பால்பிர்னி 32 ரன்னும், டெலனி 26 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ராசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 65 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14-வது ஆட்ட நாயகன் விருதை இவர் பெற்ற முகமது நபியை (14) சமன் செய்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 15 முறை பெற்றுள்ள நிலையில் அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 முறை ஆட்டநாயகன் விருதை ராசா பெற வேண்டும். இவர்களை அடுத்து சூர்யகுமார் யாதவ் 13 முறையும் ரோகித் சர்மா 12 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற (6) விராட் கோலியை ஏற்கனவே சிகந்தர் ராசா (7) பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.
- ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.
- சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. சமீபத்தில் பரிந்துரைத்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ரசிகர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் இதன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி.யின் மாதாந்திர சிறந்த வீரர் வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்