என் மலர்
நீங்கள் தேடியது "தலைமைச் செயலகம்"
- அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருமண மண்டபங்கள், ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து முதலில் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு அதில் மாற்றம் கொண்டு வந்து வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாற சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தவிர தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைவரும் வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளியே ஓடி வந்த ஊழியர்களிடம் ஒரு பிரச்சனையும் கிடையாது, அச்சம் எதுவுமின்றி உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
- சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
- பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னை தலைமைச்செயலக கட்டிடம் உறுதியாக உள்ளது. அச்சம் வேண்டாம்.
* தலைமைச்செயலக கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை.
* டைல்சில் ஏற்பட்ட ஏர் கிராக்கை அலுவலக ஊழியர்கள் விரிசல் என நினைத்து பயந்துவிட்டனர்.
* சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
* தற்போது பொறியாளர்கள் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.
* 1974-ல் கட்டப்பட்ட கட்டிடத்தில் 14 வருடங்களுக்கு முன் சிறுசிறு டைல்ஸ்கள் போடப்பட்டது.
* பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.
* 1-க்கு 1 என்று அளவில் போடப்பட்டுள்ள பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு 2-க்கு 2 டைல்ஸ் நாளையே போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
- தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய பதவிகளில் 600 பேர் பணியாற்றுகின்றனர்.
- ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் தெரிவித்தார்.
சென்னை:
தலைமைச் செயலக தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி 75 பேர் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
தலைமைச் செயலகத்தில் தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய பதவிகளில் சுமார் 600 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு 6 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில், இன்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் தெரிவித்தார். அவரது பதிலுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். தலைமைச் செயலக பணியாளர்கள் திடீரென திரண்டு வந்து மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.