search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூடான் மன்னர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றார்.
    • பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    திம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர்.

    இந்நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தனர். விருதைப் பெற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த விருது தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது. பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இது அனைத்து உத்தரவுகள், அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை விட முதன்மையானது.

    இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • பூடான் மன்னர் வாங்சுக் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பிரதமர் மோடியை பூடான் மன்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

    இதற்கிடையே, பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்தார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    • பூடான் மன்னர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

    புதுடெல்லி:

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பூடான் மன்னருடன் ஜெய்சங்கர் பேசினார்.

    இந்நிலையில், பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    • பூடான் மன்னர் லண்டன் செல்லும் வழியில் இந்தியா வந்துள்ளார்
    • வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவையும் பூடான் மன்னர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவையும் பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்தார்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பூடான் மன்னர், லண்டன் செல்லும் வழியில் இந்தியா வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நெருக்கமான மற்றும் தனித்துவமான இந்தியா-பூடான் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகள் பற்றி பூடான் மன்னருடன் விவாதித்ததாகவும், நட்புறவை மேம்படுத்துவதில் மன்னர் வழங்கிய யோசனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    ×