search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வம்சாவளி"

    • மன் பிரீத் மோனிகா சிங், கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார்.
    • முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் கோர்ட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார்.

    அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார். அவர் ஏராளமான வழக்குகளில் வாதாடி உள்ளார். ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.

    • டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகிக்கிறார்.
    • டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார்.

    வாஷிங்டன்

    உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்துள்ளார்.

    டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வம்சாவளி ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50).
    • இதற்கான ஒப்புதலை செனட் சபை வழங்கி விட்டது.

    வாஷிங்டன்

    நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.

    காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

    அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.

    அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.

    ×