search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கொள்கை முறைகேடு"

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யு கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.

    இதற்கிடையே, சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார்.
    • முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கவிதாவுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிபதி கவேரி பேவேஜா முன்னிலையில் அமலாக்கத் துறையால் (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட கவிதாவின் காவலையும் நீதிபதி நீட்டித்தார்.

    அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடிக்கும் மேல் பணமோசடி நடந்துள்ளது. இதில் வழக்கில் சிக்கிய 'இண்டோஸ் பிரிட்ஸ்' நிறுவனம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கையூட்டாக தந்த ரூ.100 கோடி, நிறுவனம்தின் லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.192.8 கோடி என மொத்தம் ரூ.292.8 கோடி கவிதாவுக்குத் தொடர்புடையதாகும்.

    வழக்கில் உள்ள தொடர்புகள் மற்றும் தனது ஈடுபாட்டை மறைப்பதற்கு, கைப்பேசிகளில் இருந்த எண்ம ஆதாரங்களை கவிதா அழித்துள்ளார். கைப்பேசியிலுள்ள தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை' எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.

    டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூலை 6-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் புதிய குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.

    ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில், ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை முக்கிய சதிகாரர் என்று அமலாக்கத்துறை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது.

    கெஜ்ரிவாலுக்கு இடைக் கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    நாள் முழுவதும் விசாரணை நடந்தால் குற்றப் பத்திரிகை, நாளை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், நீரிழிவு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கோர்ட்டு நிராகரித்தது.

    அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320-ஐ தாண்டியதால் நேற்று இரவு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

    இது குறித்து ஆம்ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கலில் தள்ளுவதற்காக, சிறையில் திட்டமிட்ட சதி மூலம் அவருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு, எய்ம்ஸ் நிபுணர் கெஜ்ரிவாலை பரிசோதித்ததும் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. இதன்மூலம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் எண்ணம் அம்பலமாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகரராவின் மகளான கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரது 3 நாள் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கவிதாவை இன்று கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தியது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் கவிதா கூறும்போது, "இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி. பா.ஜனதா வெளியில் என்று போகிறதோ? அதை சி.பி.ஐ. உள்ளே கேட்கிறது. 2 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் கேட்கிறது புதிது இல்லை" என்றார்.

    • கவிதா கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா (வயது 46), கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன்படி திகார் சிறைக்கு சென்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை 15-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என கவிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா குற்றம் சாட்டினார்.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கவிதா மீது குற்றச்சதி, கணக்குகளை மறைத்தல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது
    • அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

    "என்னுடன் இணைந்து மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்" என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிரான லோக்பால் போராட்டத்தின் போது அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பின்பு கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்.

    ×