என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணா டகுபதி"

    • செல்வமனி செல்வராஜ் இயக்கும் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
    • இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான ராணா மற்றும் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். செல்வமனி செல்வராஜ் இயக்கும் இப்படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

    காந்தா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்து ராணா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம் ஆகும். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான்.



    இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, என்ன நடக்க போகிறது என்பதற்கான சிறு முன்னோட்டம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான், காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    • 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
    • இதில் நடிகர் டாணா டகுபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் நானி மற்றும் ராணா டகுபதி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா டகுபதி, "பிரபல இந்தி படம் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து கொண்டிருந்த போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஒருவர் படப்பிடிப்பிற்கு நடுவே தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் தன் டைலாக்கையும் மறந்து பல டேக்குகளை எடுத்துக் கொண்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த துல்கர் சல்மான் மிகவும் அமைதியாக அவர் கேட்கும் டேக்குகளை கொடுத்தார்" என்று கூறினார்.



    இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலர் சோனம் கபூரை தான் ராணா சொல்கிறார் என்று தகவல்களை பரப்பி வந்தனர். இந்நிலையில், இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ராணா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் சோனம் கபூர் குறித்து கூறியதாக பரவி வந்த செய்தி முற்றிலும் தவறானது. நண்பர்களாக, நாங்கள் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளை பரிமாறிக்கொள்கிறோம். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




    • கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
    • இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது

    கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • . அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகர் ரஜினி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து வசூல் ரீதியாகவும் 600 கோடி ரூபாயிற்கு மேல்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ரஜினி தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

    இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    மேலும் நடிகர் ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தகவலை நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் படக்குழுவினர் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    முதல் பாடலைத் தொடர்ந்து படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோ மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வேட்டையன் படத்தில் ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது.

    வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    • உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலஜாமினில் அல்லு அர்ஜுன் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.

    அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் (Local Court) 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாகுபலி, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ராணா டகுபதி.
    • ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார்.

    பாகுபலி

    பாகுபலி

     

    இந்நிலையில் நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர்.

     

    செல்போனை பிடுங்கிய ராணா 

    செல்போனை பிடுங்கிய ராணா 

    அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடிங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×