என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கௌதம் அதானி"

    • அஜித் பவார் பா.ஜ.க.வில் இணைந்து, துணை முதல்வர் பதவியேற்றார்.
    • நவம்பர் மாதம் பா.ஜ.க.வுடன் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து பேசினார்.

    அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) இடையே நடந்த அரசியல் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருந்தார் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அஜித் பவார் பா.ஜ.க.வில் இணைந்து, துணை முதல்வர் பதவியேற்றார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளரிடம் பேசிய அஜித் பவார் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.வுடன் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து பேசினார்.

    அப்போது, "ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. கூட்டம் எங்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், இது டெல்லியில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நடந்தது. எல்லாருக்கும் தெரியும். இதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஆம், ஐந்து சந்திப்புகள் நடந்தன. எல்லோரும் அங்கே இருந்தார்கள்."

    "மீண்டும் சொல்கிறேன். அமித் ஷா, கௌதம் அதானி, பிரபுல் படேல், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சரத் பவார். எல்லோரும் அங்கே இருந்தார்கள். அங்குதான் எல்லாம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பழி என் மீது விழுந்துள்ளது. நான் பழியை ஏற்றுக்கொண்டேன், மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்."

    2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி பிரிந்தபோது பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க என்.சி.பி.யை பிளவுபடுத்த முயன்றபோது தான் அஜித் தற்போது குறிப்பிடும் சந்திப்புகள் நடந்தன. அஜித் பவார் பல எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடியை உருவாக்கினார்.

    அந்த நேரத்தில், சரத் பவார் பா.ஜ.க.வில் சேர மறுத்ததால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் என்.சி.பி. கட்சிக்குத் திரும்பிய பின்னர், அஜித் பவார் சுமாராக 80 மணி நேரம் துணை முதல்வராக இருந்தார். கடைசியில் ஜூலை 2023 இல் தான் அஜித் பவாரால் கட்சியைப் பிளவுபடுத்த முடிந்தது. அதன்பிறகு மஹாயுதியின் ஒரு பகுதியாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணியில் சேர்ந்தார்.

    • ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட் ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார்.
    • அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

    சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் புயலைக் கிளப்பி வருகிறது.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட்ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேடையில் பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் நடைமுறைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

     

    இதுபோன்ற சவால்களை நாம் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும். அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை, இந்தச் சவால்கள் நம்மை உடைக்கவில்லை.

    மாறாக, அவை நம்மைக் கடினமாக்கியுள்ளன, மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாம் மீண்டும் எழுவோம், முன்பை விட வலிமையாக, மேலும் வலிமையுடன் எழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமக்கு இவை அளித்துள்ளன என்று தெரிவித்தார். மேலும் 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பெர்க் அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
    • பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

    அமெரிக்காவில்  ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள்  நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நிறுத்தும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (FCPA) என்று அழைக்கப்படும் இதன் கீழ் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த சட்டதையே டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு பதிலாக புதிய விதியை உருவாக்கும்படி அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இன்று அதானி குழும பாங்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதானி பவர் லிமிடெட் உடைய ஒரு பங்கின் விலை 4.17 சதவீதம் உயர்ந்து ரூ.511.90 ஆக இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் 3.34 சதவீதம் உயர்ந்து ரூ.985.90 ஆக உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட்டின் பங்கு விலையும் 3.84 சதவீதம் உயர்ந்து ரூ.145 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட் பங்குகளும் கணிசமான அளவு உயர்ந்தன. 

    • மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்ததாக வழக்கு நடந்து வருகிறது.
    • கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.

    மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • அர்னால்ட் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதானி, உள்கட்டமைப்பு, சுரங்கம், எரிசக்தி மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய ஏழு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய அதானி குழுமத்திற்கு தலைமை தாங்குகிறார்.

    இந்நிலையில், கௌதம் அதானி, 154.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எலோன் மஸ்க் 273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

    கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக பணக்காரர் பட்டியலிலும் அதானி, அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் ஜெஃப் பெசோஸ்க்கு அடுத்தபடியாக இருந்தார்.

    அர்னால்டின் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அது இன்று 4.9 பில்லியன் டாலர் அல்லது 3.08 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் 49.7 பில்லியன் டாலரில் இருந்து 2.3 பில்லியன் டாலர் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    ×