என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிற்பயிற்சி நிலையம்"
- 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
- அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தொழிற்பயிற்சி நிலையம்
கடையநல்லுர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0-ல் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவு களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையநல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அணுகவும்.
கல்வி உதவித்தொகை
பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ. 750, அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் தி்ட்டத்தின் கீழ் ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும். சைக்கிள், சீருடைகள், தையல் கூலி, காலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. 10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் 8-ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு தொழிற்பிரிவு களில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10- ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மீனாட்சி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் அருகில்) தொலைபேசி எண் 04633-290270-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு காலியாக உள்ள தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்த்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனத்துடன் இணைந்து உயர்ரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவ னங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகை யுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.
கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
- மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
- பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023 -ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவன ங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50-ஐ விண்ணப்பதாரர் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
- ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.
திருப்பூர் :
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின், வாழ்வியல் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதலின்படி புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்குவ தற்கும்மற்றும்செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள கீழ்காணும் வகைபாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தின் வட்டாரங்களில் ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.பயிற்சி வழங்கும் விதமாகஅனைத்து துறைகளிலும் நடைபெற்று க்கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி ஐ.டி.ஐ.கள், 4-பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில் புதிய தொழில் பிரிவுகள் துவங்க www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- திருச்சுழி அருகே புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
- மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டுதொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் நான்கு தொழிற்பிரிவுகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஆணையை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 4-வது அரசினர் தொழிற் பயிற்சி நிலையமாக திருச்சுழியில் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த 1½ ஆண்டு காலத்தில் இந்த பகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் பெற்று தந்துள்ளார். இன்றைய கால கட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.அரசினர் கலைக்கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இந்த பகுதியில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வித்தரம் உயர உதவியாக இருக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்்.
இதில் நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார், திருச்சுழி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாபா போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை, ஆய்வகம் கட்ட பூமிபூஜை நடந்தது.
- இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஆயத்த இழைப்பு சட்டக பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், தி.மு.க. மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, செயற்பொறியாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்