என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு அணி"
- நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறது
- தமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.
- 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
- சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-
கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.
போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.
- டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
- ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடைபெற்ற குரூப்-பி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அசாமை வென்றது. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய அசாம் அணி 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை ஆடிய அசாம், 204 ரன்களில் சுருண்டது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குரூப்-பி பிரிவில் உள்ள டெல்லி- மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் மும்பை 293 ரன்கள் சேர்த்தது. டெல்லி 369 ரன்ககள் குவித்தது. வைபவ் ராவல் 114 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 170 ரன்களில் சுருண்டது. கேப்டன் ரகானே 51 ரன்களும், தனுஷ் 50 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர். டெல்லி தரப்பில் திவிஜ் மெஹ்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எளிதில் எட்டிய டெல்லி அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேபோல் கர்நாடகா, கேரளா அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. ராஜஸ்தான் அணி சத்தீஸ்கர் அணியை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோவா அணி சர்வீசஸ் அணியை வீழ்த்தியது. ஜார்க்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.
- உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
- இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு:
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.
ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
- 23 வீரர்களும், 30 வீராங்கனைகளும் ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை:
17-வது தேசிய இளையோர் தடகள போட்டி இன்று முதல் 19-ந்தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 23 வீரர்களும், 30 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 53 பேர் ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அணி வருமாறு:-
ஆண்கள் அணி: கார்த்திக் ராஜா, மனோஜ்குமார் (100 மீட்டர்), கென்ரிச் கிஷோர் (200 மீட்டர்), மித்ரேஷ், சகாய அன்டோ, கவரி சங்கர் (400 மீட்டர்), வால்டர் கண்டுலனா (3 ஆயிரம் மீட்டர்), அரிகரன், திவ்ய தர்ஷன ஜெயச்சந்திரன் (110 மீட்டர் தடை தாண்டுதல்), விஸ்னு ஸ்ரீ, ஜெரோம், சஞ்சய் நிஷன் (400 மீட்டர் தடை தாண்டுதல்), பால ஜீவா, அஜய் (நீளம் தாண்டுதல்), கேஸ்ட்ரோ ராஜ், விஷ்ணுவர்தன், முகேஷ் (உயரம் தாண்டுதல்), கவின்ராஜா (போல்வால்ட்), கனிஷ்கர் (ஈட்டி எறிதல்), கீர்த்தி வாசன், எஸ்.பரணி தரன் ( சங்கிலி குண்டு எறிதல்), டி.பரணிதரன் (வட்டு எறிதல்), அரவிந்த் (டெக்கத்லான்)
பெண்கள் அணி: ருதிகா (100 மீட்டர், 200 மீட்டர்) ஸ்ரீவித்யா, பிரிதிகா (100 மீட்டர்), மாரி செல்வி (200 மீட்டர், 400 மீட்டர்), கனிஸ்டா தீனா (400 மீட்டர்), கீர்த்தி (800 மீட்டர்), அகஞ்சா கெர்கெட்டா ( 1,500 மீட்டர்), சைனி கிளாசியா, பிரதிக்ஷா யமுனா (100 மீட்டர் தடை தாண்டுதல்), ஹர்ஷிதா, ஜெய விந்தியா, அபர்ணா (400 மீட்டர் தடை தாண்டுதல்)
நமீரா பாத்திமா, லின்சி, சுபாஸ்ரீ (5 ஆயிரம் மீட்டர் நடை பந்தயம்), பவீனா, திவ்யஸ்ரீ, லக்சனயா (நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப்), தரண்யா (உயரம் தாண்டுதல்), அனுஷ் ராஜ குமாரி (போல்வால்ட்), ரூபஸ்ரீ, ரின்ஷி ரோஸ், மதுமிதா (குண்டு எறிதல்), காவ்யா (சங்கிலி குண்டு எறிதல்), சுவாதி, ஷெரின் ஜோன்னா (வட்டு எறிதல்), மகரஜோதி (ஈட்டி எறிதல்), கனியிஷ்கா, ரதிஷா, வாலன்சியா, டோனி (ஹெப்டத்லான்)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்