என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முகமது அமீர்"
- நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
- இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-
பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
- பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.
2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது.
என அமீர் கூறினார்.
- சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
- வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.
இந்நிலையில் சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அமீர் கூறியதாவது, என்ன ஒரு இன்னிங்ஸ், ஒரே ஒரு ரியல் கிங் என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை என சோயிப் அக்தர் விமர்சனம்
- பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கராச்சி:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, 'தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு' என்று குறிப்பிட்டு உள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்