என் மலர்
முகப்பு » பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
நீங்கள் தேடியது "பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு"
- பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டனர்.
- சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையிலான குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 52 சிறுவர்-சிறுமிகள் அருகே உள்ள வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவர்களது பெற்றோரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு கல்வியின் அவசியத்தையும், கல்வி கற்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் விளக்கி கூறினார். மேலும் சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
×
X