search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 267351"

    • கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
    • கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.

    அட்டவாடி:

    திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று குழந்தைகள் தொழிலாளியாக பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.

    • சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தடுப்பு படையினர், போலீசார், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் மற்றும் சைல்டு லைன் ஆகிய குழுவினர் நேற்று சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது,' குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலமாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்' என்றார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    ×