என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆழ்வார்திருநகரி"
- தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
- ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.
- செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும்.
தூத்துக்குடி:
திருக்கோவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்க திட்டத்தின் பணிக்குழுவினர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் 2 மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது. மேலும் செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.
இந்த செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் 2 பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற 2 பட்டயங்கள் கோவில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டவையாகும். முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. அதில் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்கு திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பது குறித்தும், 2-வது பட்டயத்தில் கோவிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3-வது பட்டயத்தில் உபயதாரர் பற்றியும், 4-வது பட்டயத்தில் மண்டகபடிதாரர்களுக்கு பட்டு கட்டும் மரியாதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை யடுத்து தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரை மெயின் ரோடு கால்நடை மருத்துவ மனை அருகில் நகர செயலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சடகோபன், வார்டு செயலாளர்கள் மாரியப்பன், பிரேம்ஆனந்த், சந்துரு, அருணாசலம், லட்சு மணன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி பஜாரில் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் நகர செயலாளர் செந்தில் ராஜ குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கே.டி.சி. பெரியசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நாகமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுசாமி, நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இளைஞரணி செயலாளர் லட்சுமணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செய லாளர் தம்புராஜ், விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி, ஆனந்தவெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேரூராட்சி பகுதியில் குப்பைகளை எடுத்து செல்ல 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
- தொடக்க விழா செயல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அவ்வப்போது நடத்தி குப்பை இல்லா பேரூராட்சியை உருவாக்கு வதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படையில் பொது மக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குப்பைகளை வண்டிகள் மூலம் அள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்காதவாறு அவற்றை எடுத்து செல்ல தற்போது புதிதாக 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா பேரூராட்சி வளாகத்தில் தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில், செயல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதிய பேட்டரி வாகனங்களை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜன், வார்டு உறுப்பினர்கள் மணி முருகன், திருப்பதி, பாரதிதாசன், வேதவல்லி, ராஜலட்சுமி, அகமது காதர் இப்ராஹிம், மந்திரமூர்த்தி, பொன் செல்வி, மணியம்மாள், சந்திரமதி அலுவலகப் பணியாளர் சுப்பிரமணியன், ரஞ்சித் மற்றும் பரப்புரையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், டெங்கு மஸ்து பணி யாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி நம்மாழ்வார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- வருகிற 9-ந் தேதி காலை மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நவதிருப்பதியில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் பெருமாள் கருட வாகனத்தி லும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ந் தேதி காலை 9 மணிக்கு மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி இரவு பெருமாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 12-ந் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிகோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித் மற்றும் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திருவேடுபறி நிகழ்ச்சியில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
- பெருமாள் பெற்றுக்கொண்டதற்கு பட்டோலை எழுதி ஆழ்வாரிடம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்திருப்பேரை:
108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையோரத்தில் 9 நவத்திருப்பதிகள் அமைந்துள்ளது. நவதிருப்பதி ஸ்தலங்கள் என அழைக்கப்படும் இந்த ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களாக கருதி வழிபடப்பட்டு வருகிறது. இதில் முதலாவது திருப்பதியான சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில்
நேற்று சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் அத்யயன உற்சவம் இராப் பத்து 8 வது நாளான நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம் மணிக்கு 8 திருமஞ்சனம் 9 மணிக்கு திருவாராதனம். 10.30 மணிக்கு நித்யல் கோஷ்டி. மாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினா குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவேடுபரி நடந்தது.
திருமங்கை ஆழ்வார் தன் படைவீரர்களுடன் பெருமாள் திருவாபரணங்களை களவாடி செல்ல சுவாமி கள்ளப்பிரான் குதிரை வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி பிடித்தார்.
அதன் பின்னர் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி திருமங்கை ஆழ்வார் படைவீரன் ஒருவரிடம் பெருமாள் சார்பாக திரவாபரணங்களின் பெயர்களைச் சொல்லி யாரிடம் எனக் கேள்விகள் கேட்டல் நடந்தது.
அதன்பின் அத்யாபகர்கள் சீனிவாசன், ரங்க ராஜன், சீனிவாச தாத்தம், பார்த்த சாரதி, ராமானுஜம், பெரிய திருவடி, ஜெகநாதன், சம்பத், திமங்கை ஆழ்வார் பாசுரங்களை பாடினார்கள்
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் தேவராஜன். வாசன். அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு அனந்த பத்மநாபன் சீனு நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திருவேடுபறி நிகழ்ச்சி திரளான பக்தர்கள்
நவ திருப்பதிகளில் 9 வது திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மூலவர் ஆதிநாதர் தாயார்கள் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி, இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திவ்ய தேசத்தில் மார்கழி திரு அத்யன உத்சவம் (பகல் பத்து இராப்பத்து) கடந்த 24ந்தேதி அன்று ஆரம்பித்து 21 தினங்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காலையிலும் மாலையிலும் உற்ச்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பிரபந்த பாராயணம் நடைபெறுகின்றது.
இராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 8ம் திருநாளான நேற்று திருவேடுபறி வைபவம் கோயில் வடக்கு மாட வீதியில் நடந்தது. இதற்காக சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஒரு கையில் தங்க கவசம், ஒரு கையில் சாட்டை, தலையில் கொண்டை மார்பில் காசு மாலை, செண்பக மாலை, கல் பதித்த ஆபரணம், மலர் மாலைகள் போன்றவைகள் அணிந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை ஆழ்வார் கை கூப்பிய நிவையில் தோளுக்கினியானில் ஏழுந்தருளினர் மாட வீதிகளில் வலம் வந்த பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஓடிவர நிற்க என கள்வருக்கு பயந்தது போல் திருவிளையாடல் நடைபெற்றது, திருமாலுக்கு தொண்டு செய்தே தன் செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன் பெருமாளுக்கு தொடர்ந்து கைங்கரியம் செய்ய நினைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார். இவரை ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் தம்பதி சமேதராக வழிப்போக்கனாக வந்து தன் செல்வத்தை பறிகொடுக்கும் வேடுபறி வைபவம் நடந்தது. வந்தது பெருமாளே என்று உணர்ந்து தன் கைகூப்பியபடி திருமங்கைஆழ்வார் பெருமாள் முன் பணிந்து இருந்தார். இந் நிகழ்ச்சி புராணமாக அரையார் மற்றும் அர்ச்சகரால் பாடப்பெற்றது. பின்னர் பெருமாளிடம் தான் அபகரித்த தங்க நகைகளை ஒப்படைக்க, அதற்கு பெருமாள் பெற்றுக்கொண்டதற்கு பட்டோலை எழுதி ஆழ்வாரிடம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோவிலில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் ஆழ்வாருக்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், திருவாய்மொழிபிள்ளை சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியார் சிறிய திருமடல் பாடியபடி கோயிலின் உள் அழைத்து சென்றனர் இத்தகைய சிறப்பு வாய்ந்த வேடுபறி உற்ச்சவம் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
- ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
- பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தாமிரபரணி ஆற்று பாசனத்தை சார்ந்த விவசாயத்தையே வாழ்வா தாரமாக கொண்ட விவசாய பூமி ஆகும்.
ஸ்ரீவைகுண்டம் தென் கால் பாசனவசதி மூலம் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் விவ சாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல் மற்றும் வாழை பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயத்திற்கு தென் கால் பாசனம் இரண்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்த 2 வாய்க்காலில், ஒரு வாய்க்கால் கடம்பா குளத்திற்கும், ஒரு வாய்க்கால் ஆத்தூர் குளத்தி ற்கும் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
இந்த வாய்க்காலில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக பாலம் போடப்பட்டு அந்த பாலத்தின் வழியாக ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டுக்கு உட்பட்ட அழகிய மணவாளபுரம், முஸ்லிம் தெரு, பத்தவாசல், பிள்ளமடை, வேலவன் தெருவை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஊருக்கு சென்று வந்தனர்.
அதுமட்டுமின்றி ஆழ்வார் திருநகரி ரெயில் நிலையத்திற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தபாலம் ஒரு வழி பாதை போன்ற பால மாக இருப்பதால் கனரக வாகனங்கள், நெல் அறுவடை எந்திரம், மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. மேலும் அவசரமான சூழ்நிலை நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
பாலம் பழுதடைந்த நிலை யில் உள்ளதாலும் வாகனத்தில் செல்லவே அச்சமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி தான் ஆழ்வார் திருநகரிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஆழ்வார்திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், செம்பூர் நயினார் ஆழ்வை போஸ், 10-வது வார்டு செயலாளர் மந்திர மூர்த்தி, 15-வது வார்டு செயலாளர் ரமேஷ், சங்கர், சின்னத்துரை, ஆபிரகாம், பாண்டி, குருசாமி, ரஸ்வி ஆகியோர் மீன் வளம் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பாலத்தை அகலப்ப டுத்தி புதிய பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய பாலம் கட்ட ஆவனம் செய்வதாகவும் கூறினார்.
- புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு பஜாரில் ரூ.15.26 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 429 சதுர அடியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த கிராம நிர்வாக அலுவலம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரமசக்தி, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
மேலும் கடையனோடையில் ரூ19.72 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி முன்னிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொடர்ந்து தேமாங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரூ9.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதேபோல மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகளுடன் வரிசையில் அமர்ந்து அவர்களுக்கு லட்டு வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் இசை சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், துணை தலைவர் ராஜாத்தி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணை தலைவர் சுந்தரராஜன், செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சிவக்குமார், கட்டிட ஒப்பந்ததாரர் ராமன், காண்டிராக்டர் சைமன், கடையனோடை தி.மு.க. கிளை செயலாளர் அண்ணாதுரை, ஆழ்வார் திருநகரி வட்டார வருவாய் ஆய்வாளர் முத்து ராமன், கிராம அலுவலர் ஜேம்ஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம்.
தென்திருப்பேரை:
ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் நாலுமாவடி, புறையூர், கருவேலம்பாடு, உடையார் குளம், மளவராயநத்தம், அழகப்பபுரம், குரங்கணி, புன்னக்காயல் ஆகிய பஞ்சாயத்துகளில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இக்கிராம பஞ்சாயத்து களில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரி ஒருவருக்கு அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் கடன் உதவி பெற்று சுய தொழில்கள் தொடங்கலாம்.
இதற்கு 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மற்றும் வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம் தொடங்குபவர் அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பம் மற்றும் திட்ட அறிக்கை ஆகியவற்றை வேளாண்மை உதவி இயக்குனர் ஆழ்வார் திருநகரி அலுவலகத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம். அரசு நிதி உதவி 25 சதவீதம் மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரை மூலதன மானியம் வழங்கப்படும். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் தென் திருப்பேரை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்