search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம்- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    கிராம நிர்வாக அலுவலம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அருகில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரமசக்தி, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

    ஆழ்வார்திருநகரியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம்- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியில் நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு பஜாரில் ரூ.15.26 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 429 சதுர அடியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த கிராம நிர்வாக அலுவலம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரமசக்தி, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கண்ணன் முன்னிலையில் நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    மேலும் கடையனோடையில் ரூ19.72 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி முன்னிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொடர்ந்து தேமாங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரூ9.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதேபோல மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகளுடன் வரிசையில் அமர்ந்து அவர்களுக்கு லட்டு வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் இசை சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லகண்ணு, ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், துணை தலைவர் ராஜாத்தி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணை தலைவர் சுந்தரராஜன், செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சிவக்குமார், கட்டிட ஒப்பந்ததாரர் ராமன், காண்டிராக்டர் சைமன், கடையனோடை தி.மு.க. கிளை செயலாளர் அண்ணாதுரை, ஆழ்வார் திருநகரி வட்டார வருவாய் ஆய்வாளர் முத்து ராமன், கிராம அலுவலர் ஜேம்ஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×