என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா கருட சேவை ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா கருட சேவை](https://media.maalaimalar.com/h-upload/2023/03/06/1845462-3alwarkovil.webp)
கருட சேவை நிகழ்ச்சியில் பெருமாள் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா கருட சேவை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி நம்மாழ்வார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- வருகிற 9-ந் தேதி காலை மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நவதிருப்பதியில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் பெருமாள் கருட வாகனத்தி லும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ந் தேதி காலை 9 மணிக்கு மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி இரவு பெருமாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 12-ந் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிகோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித் மற்றும் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.