search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபேந்திரா"

    • சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
    • உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார்.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

    தற்பொழுது படத்தில் உபேந்திரா நடிக்கவுள்ளதை படக்குழு அதிகார்ப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தில் அவர் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சத்யா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் முழு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளிவரவில்லை.

    இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு மாசான பாட்டிற்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உபேந்திரா இதற்கு முன் விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்து இருந்தார். இவர் கன்னடம் அல்லாது பிர மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் நடிப்பில் வெளிவந்த சன் ஆஃப் சத்யமூர்த்தி மற்றும் கானி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டானது. உபேந்திரா நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்து யூஐ என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘கப்ஜா’.
    • இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆர். சந்துரு இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'கப்ஜா'.இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


    கப்ஜா

    கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    கப்ஜா

    ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு 'கே. ஜி எஃப்' படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இப்படம் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    கப்ஜா போஸ்டர்

    'கப்ஜா' திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது," 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். " என்று கூறினார்.

    • உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'கப்ஜா'.
    • நடிகர் உபேந்திராவின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீசரை நடிகர் ராணா வெளியிட்டுள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'கப்ஜா'. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.சந்துரு இயக்கியுள்ளார். இதில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

     

    கப்ஜா

    கப்ஜா

    இந்நிலையில் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி நடிகர் ராணா டகுபதி இணையத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாண்டமாஅ உருவாகியுள்ள 'கப்ஜா' படத்தின் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்' என படக்குழு தெரிவித்துள்ளது. தெரிவித்திருக்கிறார்கள்.

    கப்ஜா

    கப்ஜா

     

    மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ஆர்.சந்துரு பேசியதாவது, "1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் 'கப்ஜா'. இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டேக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்" என்றார். 

    ×